அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021
Ashok Leyland Ltd Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது ஷேர்சாட் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் (Ashok Leyland Ltd) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலை வகை | தனியார் துறை |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
பணியிட விபரங்கள்:
1. இயந்திர இயக்கவல்லுநர் (Machinist (Grinder)
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
14 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பள விகிதம்:
மத்திய அரசின் வழிகாட்டின்படி NAPS-ன் விதிமுறைப்படி மாத ஊதியமாக மேற்கண்ட பதவிகளுக்கு குறைந்தப் பட்சம் ரூ. 7,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 8,050 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் (NSDC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்) https://apprenticeshipindia.org என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். மேற்கண்ட இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.09.2021
1. இயந்திர இயக்கவல்லுநர் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!