You dont have javascript enabled! Please enable it!

அரியலூர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 19 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரியலூர் வேலைவாய்ப்புகள் 2022

Ariyalur Medical College Hospital Recruitment 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கொரோனா வைரஸ் (COVID-19) பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கீழே பட்டியலிடப்பட்ட காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரடி





பணியிட விபரங்கள்:

1. ஆய்வக நுட்புநர் – 31 பதவிகள்

2. டிரைவர் – 2 பதவிகள்

3. வார்டு பாய் – 8 பதவிகள்

4. மருத்துவமனை பணியாளர் – 12 பதவிகள்

5. ஸ்ட்ரெச்சர் தாங்குபவர் – 6 பதவிகள்

6. துப்புரவு செய்பவர் – 19 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 78 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. ஆய்வக நுட்புநர் (Lab Technician)

CMLT அல்லது DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

2. டிரைவர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் HMV டிரைவர் லைசன்ஸ் இருக்க வேண்டும். மேலும் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

3. வார்டு பாய்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

4. மருத்துவமனை பணியாளர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. ஸ்ட்ரெச்சர் தாங்குபவர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. துப்புரவு பணியாளர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் வழிமுறை பின்பற்றப்படும்.




சம்பள விகிதம்:

அனைத்து பதவிகளும் ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

1. லேப் டெக்னீஷியன்

மாதம் ரூ. 8,000/-

2. டிரைவர்

மாதம் ரூ. 9,000/-

3. வார்டு பாய்

மாதம் ரூ. 6,500/-

4. மருத்துவமனை பணியாளர்

மாதம் ரூ. 6,000/-

5. ஸ்ட்ரெச்சர் தாங்குபவர்

மாதம் ரூ. 8,500/-

6. துப்புரவு பணியாளர்

மாதம் ரூ. 8,500/-

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் நேரிலோ /விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் பணிவரன்முறை செய்யப்படவோ (அ) பணி நிரந்தரம் செய்யப்படவோ இயலாது என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19-01-2022 மாலை 5 மணி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரியலூர் – 621 704.

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம்  இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம்  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்