Anna University Chennai Recruitment Notification 2021
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை வேலைவாய்ப்புகள் 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. தொழில்முறை உதவியாளர் – I (Professional Assistant – I)
2. தொழில்முறை உதவியாளர் – II (Professional Assistant – II)
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
1. தொழில்முறை உதவியாளர் – I (Professional Assistant – I)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம்/ நிறுவனம் அல்லது பல்கலைக்கழகலிருந்து B.E / B.Tech இல் Rubber Plastics Technology/ Plastics Technology/ Polymer Technology/ Chemical Engineering/ Mechanical Engineering ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. தொழில்முறை உதவியாளர் – II (Professional Assistant – II)
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம்/ நிறுவனம் அல்லது பல்கலைக்கழகலிருந்து MBA / M.Sc. (Computer Science) முதுகலை பட்டத்தை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 50 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ ST/ OBC/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்த்தப்படும்.
மாத ஊதியம்:
1. தொழில்முறை உதவியாளர் – I (Professional Assistant – I)
தினசரி சம்பள வீதம் ரூ. 797 அளிக்கப்படும்.
2. தொழில்முறை உதவியாளர் – II (Professional Assistant – II)
தினசரி சம்பள வீதம் ரூ. 748 அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து புகைப்படத்துடன் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் application for the post of_________Department__________ என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11-11-2021 மாலை 5 மணி
AU அதிகாரப்பூர்வ இணையத்தளம்
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் (Application Form) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Dean
Madras Institute of Technology Campus
Anna University
Chromepet
Chennai-600 044.
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!