வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் நிர்வாகம் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி உள்ளது. இந்து அறநிலையத்துறை இந்த கல்லூரியில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
1. உதவி பேராசியர்கள்
துறைகள்:
1. பி.காம்.,
2. பிபிஏ
3. பிஎஸ்சி., (கணினி அறிவியல்)
4. பி.சி.ஏ.,
5. தமிழ்
6. ஆங்கிலம்
7. கணிதம்
8. இயற்பியல் இயக்குனர்
9. நூலகர்
மொத்தம் பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
யுஜிசி விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய பாடப் பிரிவுகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் Ph.D அல்லது NET / SLET தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் குறிப்பிடப்படவில்லை. அரசின் விதிமுறை பின்பற்றப்படும். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் 2-பக்க பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலுக்கு அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு: இந்துக்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். வேலைக்கு நேர்முகத்தேர்வில் பங்கேற்க வருபவர்கள் கையோடு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ்கள், மற்றும் பிஎச்டி, ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றதற்கான சான்றிதழ்கள் உள்பட படிப்பு சான்றிதழ்களை கொண்டு வாருங்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 18-10-2021 காலை 10 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. S.J.அவென்யூ. கொளத்தூர், சென்னை-99.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!