You dont have javascript enabled! Please enable it!

AIC – விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 13 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் (AIC) வேலைவாய்ப்புகள் 2021

Agriculture Insurance Company of India Limited (AIC) Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

முன்னணி பயிர்க் காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் (ஏஐசி) புதிய ஆட்சேர்ப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. மேலாண்மை பயிற்சியாளர் (Management Trainee) – 30 பதவிகள்

2. இந்தி அதிகாரி (Hindi Officer) – 1 பதவி

மொத்த பணியிடங்கள்: 31 பதவிகள்

கல்வித்தகுதி:

1. மேலாண்மை பயிற்சியாளர் (Management Trainee)

i) B. Sc. (Agriculture)/ B. Sc. (Horticulture)/ B.E./B. Tech in Agriculture Engineering அல்லது M.Sc. (Agriculture) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்கள் போதுமானது.

ii) BE/B. Tech (Computer Science/IT) அல்லது MCA (Masters in Computer Applications) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்கள் போதுமானது.

iii) Graduate in Law அல்லது Post Graduation in Law ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்கள் போதுமானது.

iv) B.Com அல்லது M.Com அல்லது Chartered accountants (ICAI) அல்லது Company Secretary (ICSI)  அல்லது Cost and Management Accountant (The Institute of Cost Accountants of India) அல்லது MBA(Finance) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்கள் போதுமானது.

2. இந்தி அதிகாரி (Hindi Officer)

பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பட்டப்படிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-11-2021 -ன் படி குறை ந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 30 வயது வரையும் மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

மேலும் அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.




சம்பள விகிதம்:

1. மேலாண்மை பயிற்சியாளர் (Management Trainee)

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக (முதலாம் ஆண்டு) மாதம் ரூ. 40,000, இரண்டாம் ஆண்டு முதல் ரூ. 42,500 வரை வழங்கப்படும்.

2. இந்தி அதிகாரி (Hindi Officer)

அடிப்படை ஊதிய அளவு I -ன் படி அடிப்படை மாத ஊதியமாக ரூ. 32,795 மற்றும் அதிகப்பட்சம் 65,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் OBC பிரிவினர்கள் ரூ. 1,000 செலுத்த வேண்டும். SC/ST/PwBD பிரிவினர்கள் ரூ. 200 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்களின் இறுதிப்பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வில் பங்கேற்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 200. 2 ½ மணிநேரம் (150 நிமிடங்கள்) கால அளவு. ஆன்லைன் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 60% பொது, OBC மற்றும் EWS மற்றும் எஸ்சி/எஸ்டிக்கு 55%. ஆன்லைன் தேர்வு ஜனவரி 2022 இல் நடைபெறும் (தற்காலிகமானது). தேதிகள் தேர்வுகள் நிறுவனத்தின் விருப்பப்படி மாற்றப்படும். ஆன்லைன் தேர்வு விண்ணப்பதாரர்களால் பெறப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தேர்வு செய்யப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

i) விண்ணப்பதாரர்கள் அக்ரிகல்சல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் (AIC) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக நிறுவனத்திற்கு அனுப்பப்படும் ஆஃப்லைன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.

ii) விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோடு செய்து நிரப்பி ஸ்கேன் செய்து அனைத்து சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் நகல்களை (PDF படிவம்) ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் தேவைப்படும் இடங்களில் பதிவேற்ற வேண்டும். தவறினால் அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13-12-2021

AIC -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)   இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

 அதிகாரப்பூர்வ விண்ணப்பங்கள் (Official Application Forms)  இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்