You dont have javascript enabled! Please enable it!

சி பி எஸ் சி க்கு பிறகு என்ன படிக்கலாம்?

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




ப்ளஸ் டூ-க்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி

சி பி எஸ் சி தேர்வு எழுதியவர்களுக்கு அடுத்தது என்ன? இந்தக் கேள்வி அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் பல எண்ணங்களும் கேள்விகளும் எழும்.




சி பி எஸ் சி க்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்கள் யோசிக்கும் வேளையில், பிள்ளைகளை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்ற தேடுதலை பெற்றோர்களும் ஆரம்பித்திருப்பார்கள். இவர்களுக்கு உதவும் வகையில், என்னென்ன கல்லூரிப் படிப்புகள் உள்ளன என்பது குறித்த கட்டுரை. பள்ளி கல்விற்க்கு பிறகு எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதே வாழ்க்கையைத் தீர்மானிக்க முக்கியக் காரணியாக இருப்பதால், கவனத்துடன் வாய்ப்புள்ள துறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்ல, தேர்ச்சி பெறாதவர்களும் மேற்கொண்டு படிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன




முதலில் உங்களுக்கு ஈடுபாடுள்ள துறை எது? நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். உங்களுக்கான துறையைத் தேர்வு செய்வதோடு அதற்குரிய பட்டப்படிப்பை பயில அங்கீகாரம் பெற்ற கல்லூரியைத் தேர்வு செய்யுங்கள். எதிர்காலத்தில் அந்தத் துறைக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். படிக்கும்போதே பட்டப்படிப்பு சம்பந்தப்பட்ட தொடக்கநிலை உயர் தேர்வுகளையும் எழுதுவதற்குத் திட்டமிடுங்கள். பெற்றோர்களின் விருப்பத்துக்கு செவிசாய்க்காமல் உங்கள் விருப்பத்துக்கேற்ற துறையில் பிடித்த பட்டப்படிப்பை தேர்வு செய்யுங்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்.




இப்போது சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. அரசு சட்டக்கல்லூரிகளில் சேர்வதற்கு பிளஸ்டூவில் எந்த குரூப் எடுத்திருந்தாலும் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடுக்கப்பட்டிருக்கும் பட்டப்படிப்புகளோடு இன்னும் ஒவ்வொரு துறையிலும் பட்டப்படிப்புகள் தனித்தனியாக விரிந்துகொண்டே செல்கின்றன. இதைப் பற்றி முதலில் விரிவாக அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது.




டிப்ளோமா படிப்பில் சேர்வது. பொறியியல் கல்லூரியில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றனவோ அத்தனை படிப்புகளும் டிப்ளோமாவிலும் உண்டு. மூன்று ஆண்டுகள் டிப்ளோமா படிப்பைப் படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறலாம். தமிழ்நாட்டில் நிறைய அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இங்கு குறைந்த கட்டணத்தில் படித்து முடிக்கலாம். படிப்பை முடித்தவுடன் பொறியியல் சார்ந்த நிறுவனங்களில் எளிதாக வேலைவாய்ப்பைப் பெற முடியும். மூன்றாண்டு வேலை அனுபவத்துடன் பகுதி நேர பி.இ. / பி.டெக் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.




பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களின் கட்டாயம், நண்பர்களின் உந்துதல், தெரிந்தவர்கள் பணியாற்றும் துறை, தனியார் கல்லூரிகளில் கவர்ச்சிகரமான விளம்பரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே படிப்பையும் கல்லூரியையும் தேர்வுசெய்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்டப் பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது உங்களுடைய விருப்பத்தையும், நோக்கத்தையும், எதிர்காலத் திட்டங்களையும், குடும்பச் சூழல்களையும் பொறுத்ததே ஆகும். மாறாக, நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பொறுத்தது அல்ல என்பதை முதலில் மனதில்கொள்ள வேண்டும்.



மாணவர்கள், தங்களுடைய திறனுக்கும் மனநிலைக்கும் ஏற்றாற்போல படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், பெரும்பாலானோர் மதிப்பெண் அடிப்படையில் படிப்பைப் தேர்ந்தெடுக்கும் வழக்கம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது வேலைவாய்ப்பை வழங்கும் படிப்புகளாகவும், வளர்ச்சி உள்ள துறைகளையும் மனதில்வைத்து விரும்பமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



முதல் மதிப்பெண் பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேறுவார்கள், அதிக மார்க் வாங்கியவர்கள்தான் அனைத்து வசதியான வாழ்க்கையையும் வாழ்வார்கள் எனும் தவறான மனப்போக்கை மாணவர்கள் மனதில் விதைக்காமல் உனக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய் என்று பெற்றோர்கள் அறிவுறுத்தும் தருணம் இது.




பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் முதலில் உயர் கல்வியில் என்னென்ன துறைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வது நல்லது. இங்கே ஒவ்வொரு துறை ரீதியாக பலவிதமான பட்டப்படிப்புகள் உண்டு. பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து, பிடித்த, ஈடுபாடுள்ள துறையிலான படிப்பைத் தேர்வு செய்வது அவசியம். லட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்து படிக்கும் உயர்கல்விதான் சிறந்த கல்வி. அப்படி படித்தால்தான் உடனடியாக வேலை கிடைக்கும் என்கிற தவறான புரிதல் இங்கு இன்னும் மிஞ்சியிருக்கிறது.




சி பி எஸ் சி க்குப் பிறகு என்ன படிப்பு படிக்கலாம்?

எங்கு படிக்க வேண்டும்?

எந்த படிப்புக்கு என்ன செலவாகும்?

எந்த படிப்பை படித்தால் வேலை கிடைக்கும்?

நுழைவுத்தேர்வு எழுதி சேர வே‌ண்டிய படிப்புகள் எவை?

போன்ற அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய மத்திய அரசால் வெளியிடப்பட்ட முழுமையான வழிகாட்டி தகவல்கள் கொண்ட புத்தகத்தை [PDF] டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




வாட்சப் குழுவில் இணைய…


இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்