You dont have javascript enabled! Please enable it!

ஆதி திராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) மாணவர்கள் தமிழக அரசின் உதவிதொகை பெறுவது எப்படி? முழு விபரம்

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Adi Dravidar And Tribal Welfare Scholarship For SC/ST Students





உதவித் தொகை பற்றிய சுருக்கமான அறிமுகம்:

1. ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்தை முன்னிட்டு ஆறாம் வகுப்பில் உள்ள பட்டியலின/பட்டியல்பழங்குடி மாணவிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 1000 வழங்கப்படும்.

2. பட்டியலின/பட்டியல்பழங்குடி ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 1500 வழங்கப்படும்.

3. துப்புரவு தொழிலில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகள் பத்தாம் வகுப்பு படித்தால் அவர்களுக்கு உதவிதொகையாக ரூபாய் 1,850 வழங்கப்படும்.



உதவித்தொகைக்கான தகுதி:

1. விண்ணப்பிக்கும் மாணவர் பட்டியலின/பட்டியல்பழங்குடியை சேர்ந்தவராகவோ, இஸ்லாமிய சிறுபான்மையினராகவோ அல்லது மதம் மாறிய கிறிஸ்தவராகவோ இருத்தல் வேண்டும்.

2. ஐந்தாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

3. முதலாம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் மேற்கொள்பவர் வரை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் உதவிதொகையை பெற தகுதியுடையவர் ஆவார்கள்.



தேவையான ஆவணங்கள்:

1. குடியிருப்பு சான்றிதழ்

2. சாதி சான்றிதழ்

3. மதிப்பெண் பட்டியல்

4. புகைப்படம்

5. வருமான சான்றிதழ்

6. வங்கி பற்றிய தகவல்கள்

7. அடையாள சான்றிதழ்

விண்ணப்பிக்க உங்கள் ஊரின் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தை (Tamilnadu E Service Centre) அணுகவும்.

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.03.2022 ஆகும்.

2021-2022 கல்வியாண்டிற்கான H.o.D நிலை செயல்முறைக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பத்திற்கான மாவட்ட அளவிலான செயல்முறைக்கான கடைசி தேதி 21.03.2022 மற்றும் 25.03.2022 ஆகும்.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website): இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்